அமெரிக்காவில் சில மாதங்கள் முன்பு, தனது தாய்மொழியில் தனது மகனிடம் பேசிய ஸ்பானிஷ் பெண்ணை பொது இடத்தில் வைத்து வசைபாடிய ஆங்கிலேயப் பாட்டி நினைவிருக்கலாம்!
இதன் தொடர்ச்சியாக, நியூயார்க் நகரில் பேங்க்கில் பணிபுரியும் கருப்பின பெண் ஒருவர், சாலைவிதியை முறையாக கடைபிடிக்காத காரணத்தால், போலீசார் கொண்டுசென்ற தனது பி.எம்.டபிள்யூ. காரை மீட்கச் சென்ற இடத்தில் பைத்தியம் என அடையாளம் காணப்பட்டு மனநல மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மனநல மருத்துவமனையில் அவருக்கு ஒரு வாரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கருப்பினப் பெண் ஒரு பி.எம்.டபிள்யூ. காரின் உரிமையாளராக இருக்க முடியாது என்ற எண்ணமும், அவருக்கு பேங்கில் வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்னும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட பொது சேவைப் பணியில் உள்ள போலீசாரின் தாழ்வான பார்வை, அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க காரணமாக அமைந்தது.
எப்படியாவது தன்னை நம்ப வைக்க, தனது டுவிட்டர் பக்கத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பின்தொடர்வதாகவும் (ஃபாலோ) அந்தப் பெண் குறிப்பிட்டார். இவையனைத்துமே உண்மையாக இருந்தும், அந்தப் போலீசார் எதையுமே நம்பவில்லை. மாறாக, அந்தப் பெண் மோசமாக காரை ஓட்டி வந்ததாகவும், அவரை நிறுத்திய போலீசாரின் கேள்விகளுக்கு முறையாக பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ள அவர்கள் அதுவே, அவரை மனநல மருத்துவரிடம் அனுப்ப காரணமானதாகவும் கூறியுள்ளனர்.