Breaking
Mon. Nov 18th, 2024

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசா­ர­ணைகளை பலப்­ப­டுத்தும் வகையில் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது.

இலங்கை குறித்த சர்­வ­தேச தலை­யீ­டு­களை இலங்கை அர­சாங்கம் சரி­யான முறையில் கையாளும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

தவ­றி­யேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் தொடர்ந்தும் மஹிந்­தவின் ஆக்­கி­ர­மிப்பில் நாடு இருந்­தி­ருந்தால் எமது இரா­ணுவ வீரர்கள் நிச்­ச­ய­மாக சர்­வ­தேச நீதி­மன்றில் தண்­டிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்­ளது. இந்த நிலையில் இலங்­கையின் மீதான சர்­வ­தேச தலை­யீடு தொடர்ந்தும் காணப்­படும் வாய்ப்­புக்கள் உள்­ளனவா என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் இன்னும் இரு தினங்­களில் அறிக்கை முன்­வைக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இப்­போது இலங்கை தொடர்பில் எழுந்­துள்ள சர்­வ­தேச அழுத்­தங்கள் இன்று நேற்று ஆரம்­ப­மா­கிய ஒன்­றல்ல. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட நேரத்தில் இருந்து இலங்கை இரா­ணு­வத்தின் மீது போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஆனால் இந்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் நிரூ­பிக்கக் கூடிய ஆதா­ரங்கள் எவற்­றையும் முன்­வைக்­க­வில்லை. எனினும் சர்­வ­தேச ஊட­கங்கள் ஒரு­சில தமது தனிப்­பட்ட வியா­பார மற்றும் ஒரு­ சிலரின் தூண்­டு­தலின் பெயரில் பொய்­யான புகைப்­ப­டங்­க­ளையும், வீடியோ காணொ­ளிப்­ப­தி­வு­க­ளையும் தயா­ரித்து இலங்கை இரா­ணு­வத்­துக்கு எதி­ராக வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

எனினும் இந்த ஆதா­ரங்கள் அனைத்தும் உண்­மைக்குப் புறம்­பா­னவை. இலங்கை இரா­ணுவம் கடந்த காலத்தில் மிகப்­பெ­ரிய மனி­தா­பி­மான சேவை­யினை செய்­துள்­ளது. இந்த நாட்டில் பிரி­வினைக் கொள்­கையில் பல­ம­டைந்த ஆயு­த­தா­ரி­களின் தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளினால் நாட்டில் மூவின மக்­களும் பாதிக்­கப்­பட்­டனர். குறிப்­பாக வடக்­கிலும் கிழக்­கிலும் மிக மோச­மான அடக்­கு­முறை செயற்­பா­டுகள் காணப்­பட்­டன. அவ்­வா­றான சூழலில் இருந்து நாட்­டையும் மக்­க­ளையும் காப்­பாற்­றி­யுள்ளோம்.

யுத்தம் முடி­வ­டைந்து கடந்த ஐந்து ஆண்­டு­களில் நாட்டின் சூழல் முழு­மை­யாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது. வடக்கு கிழக்கு உள்­ளிட்ட நாட்டின் அனைத்து பகு­தி­களும் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளன. அதேபோல் நாட்­டுக்கு எதி­ரான உள்­நாட்டு அச்­சு­றுத்­தல்கள் அனைத்தும் முழு­மை­யாக தடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இவை அனைத்­துமே ஒரு நாட்டின் மிக முக்­கிய உள்­நாட்டு செயற்­பா­டு­க­ளாகும். ஆகவே இவற்றை சர்­வ­தேசம் அமைப்­புக்கள் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் சர்­வ­தேச அளவில் செயற்­படும் புலம்­பெயர் புலிகள் அமைப்­புகள் மற்றும் பிரி­வி­னை­வாத அமைப்­புக்­களின் தேவையை பூர்த்­தி­செய்யும் வகையில் சர்­வ­தேச தரப்பும் செயற்­ப­டு­கின்­றது. ஒரு பக்க நியா­யங்­களை மாத்­தி­ரமே கவ­னத்தில் கொண்டு சர்­வ­தேசம் செயற்­ப­டு­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. ஆயினும் கடந்த காலத்தில் சர்­வ­தேச தலை­யீ­டுகள் அதி­க­ரித்து காணப்­பட்­டாலும் இப்­போது நிலைமை முழு­மை­யாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது.

கடந்த ஆட்­சியில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த சர்­வ­தேச தலை­யீ­டுகள் இப்­போது குறை­வ­டைந்­துள்­ளன. அதேபோல் புதிய அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்கை பல­ம­டைந்­துள்­ளது. ஆகவே இவை அனைத்தையும் நல்ல முன்­னேற்­றங்­க­ளா­கவே நாம் கரு­து­கின்றோம். அத்­தோடு இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை முன்­வைக்கும் விசா­ரணை அறிக்­கையும் இலங்­கையை பாதிக்­காத வகை­யிலும் சர்­வ­தே­சத்தின் நேரடித் தலை­யீ­டுகள் எவையும் இல்­லாத வகை­யிலும் அதே­வேளை உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­யினை பலப்­ப­டுத்தும் வகை­யி­லுமே அமையும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.

இந்த ஆட்­சி­மாற்றம் நாட்­டுக்கும் இரா­ணுவ வீரர்­க­ளுக்கும் நன்­மை­ய­ளிக்கும் வகையில் அமைந்­துள்­ளது. தவ­றி­யேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் நாட்டின் நிலைமை முழு­மை­யாக மாறி­யி­ருக்கும். மஹிந்­தவின் ஆக்­கி­ர­மிப்பில் நாடு தொடர்ந்தும் இருந்­தி­ருந்தால் எமது இரா­ணுவ வீரர்கள் நிச்­ச­ய­மாக சர்­வ­தேச நீதி­மன்றில் தண்­டிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள். கடந்த காலத்தில் குறிப்­பிட்ட சில அர­சியல் தலை­வர்கள் உள்­ளிட்ட பல இரா­ணுவ வீரர்­களின் பெயர்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. ஆனால் இன்று அவை அனைத்தும் நீக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் நேரடி சர்­வ­தேச தலை­யீட்டை ஏற்­ப­டுத்தி நாட்டில் மீண்­டு­மொரு நெருக்­கடி நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருப்­பார்கள். ஆயினும் அவ்­வா­றான செயற்­பா­டு­களில் இருந்து நாடு பாது­காக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் இப்­போ­தி­ருக்கும் நிலையில் இலங்கை குறித்த சர்­வ­தேச தலை­யீ­டு­களை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் கையாளும் என நம்பமுடியும். எவ்வாறு இருப்பினும் இலங்கை தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறையினை கையாள வேண்டும் என்பதே எமது இப்போதைய நிலைப்பாடாகும். அதேபோல் இலங்கை இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த எமது அரசாங்கம் ஒருபோதும் இடம் கொடுக்காது. யுத்தத்தில் ஏதேனும் மனித உரிமைகளை மீறும் வகையில் அரச தரப்பினால் குற்றங்கள் இழைக்கப் பட்டிருக்குமாயின் அதையும் சட்டப்படி கையாள்வோம் எனக் குறிப்பிட்டார்.

Related Post