பௌத்த நாடான இலங்கையில், நாட்டில் மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடைசெய்யுமாறும் முஸ்லிம்கள் தமது சமயக் கடமையான குர்பானை நிறைவேற்றுவதற்கு மாத்திரம் தனியான விஷேட சட்டமொன்றினை நிறைவேற்றுமாறும் சிங்கள ராவய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இது தடைசெய்யப்பட்டால் மாத்திரமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த மதம் அனுமதிக்காத மாடு அறுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட வேண்டும் எனவும் சிங்கள ராவய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.