Breaking
Mon. Dec 23rd, 2024

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையின் விசா­ரணை அறிக்­கையில் பார­தூ­ர­மான விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டாலும் பரிந்துரைகள் பார­தூ­ர­மாக அமை­யாது.

பார­தூ­ர­மான அத்­து­மீறல் விசா­ரணைகள் வலி­யு­றுத்­தப்­படமாட்­டாது என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது என பிர­திவெளி­வி­வகார அ­மைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார்.

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக சந்­தே­கங்­களை தீர்க்க அர­சாங்கம் செயற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கை­ மீ­தான விசா­ரணை அறிக்கை பார­தூ­ர­மான வகையில் அமையும் என தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்கை அர­சாங்கம் எவ்­வா­றான பொறி­மு­றை­களை கையா­ளப்­போ­கின்­றது என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் நடை­பெற்ற ஆயுத போராட்­டத்தில் இலங்கை இரா­ணு­வத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் மற்றும் மனி­த­வு­ரிமை மீறல்கள் என்­பன தொடர்பில் சர்­வ­தேச அமைப்­பு­களும், இலங்­கையின் தமிழர் தரப்­பும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளன. இவை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் இந்த விசா­ரணை அறிக்கை இப்­போது வெளி­வ­ர­வுள்­ளது. இந்த அறிக்கை பார­தூ­ர­மான அறிக்­கை­யாக இலங்­கையின் அரச தரப்பின் மீது குற்றம் சுமத்­தப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டாலும் அவை எந்­த­ளவு சாத்­தி­ய­மா­னது என்­பது தெரி­ய­வில்லை.

ஏனெனில் இந்த அறிக்­கையில் என்ன கார­ணிகள் முன்­வைக்­கப்­போ­கின்­றனர். எவ்­வா­றான கார­ணிகள் சுட்­டிக்­காட்­டப்­படும் என்ற விடயங்கள் எமக்குத் தெரி­யாது. ஆனால், இலங்­கையின் ஆட்சி மாற்றம் இலங்­கையின் ஜன­நா­யக செயற்­பா­டு­களை பல­ம­டைய செய்­துள்­ள­துடன் பிரச்­சி­னைகள் பல தீர்க்கப் பட்­டுள்­ளன.

ஆகவே, எமது அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் சர்­வ­தேசம் நல்ல நிலைப்­பாட்டை கொண்­டுள்­ளது. ஜெனிவா கூட்­டத்­தொ­டரின் ஆரம்ப உரையின் போதும் மனித உரி­மைகள் ஆணை­யாளர் இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அதேபோல், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் இலங்­கையின் அண்­மைக்­கால ஜன­நா­யக மாற்­றங்கள் மற்றும் மக்­க­ளி­டை­யே­யான சாத­க­மான வெளிப்­பா­டுகள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அவ்­வா­றான நிலையில் இலங்­கையின் அண்­மைக்­கால மாற்­றங்­களை கவ­னத்தில் கொண்டு சாத­க­மான முடி­வு­களை ஐக்­கிய நாடுகள் சபை மேற்­கொள்ளும் என நம்ப முடியும். அத்­தோடு அறிக்­கையில் பார­தூ­ர­மான விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டாலும் பரிந்துரைகள் பார­தூ­ர­மாக அமை­யாது. அதேபோல் உள்­ளக பொறி­மு­றை­களை கையாளும் அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டலாம்.

ஆனால், பார­தூ­ர­மான அத்­து­மீறல் விசா­ர­ணை­கள் வலி­யு­றுத்­தப்­பட மாட்­டாது என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.

மேலும் இலங்­கையில் இடம்பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிய அர­சாங்கம் அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது. உள்­ளக விசா­ர­ணை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக சந்­தே­கங்­களை தீர்க்­கவே நாம் முயற்­சிக்­கின்றோம். அதேபோல் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டு­களை நாம் நன்கு அறிந்­துள்ளோம். அவர்கள் எவ்­வா­றான நீதியை எதிர்­பார்க்­கின்­றனர் என்­பது எமக்குத் தெரியும். ஆகவே அனைத்து வகை­யிலும் இந்த சிக்கல் நிலை­மையை தீர்க்கும் முயற்­சி­களை அர­சாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல் இலங்கை இராணுவத்தின் சேவைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் மூலமாகவே இந்த நாட்டில் அமைதி உருவாகியுள்ளது. அவர்களின் சேவையினை நாம் தட்டிக்கழிக்க முடியாது. ஆயினும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் அல்லது மனிதவுரிமை மீறல்களை இராணுவம் மேற்கொண்டிருக் குமாயின் அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்றார்.

Related Post