அஸ்ரப் ஏ. சமத்:
சட்டத்தரணி ஏ.ஜி.எச். அமீன் இதுவரை 17 சட்டத்துறை புத்தகங்களை மும்மொழிகளிலும் எழுதியுள்ளார்.
வெள்ளவத்தை மூர் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் ஆங்கில மொழி மூலமான அல் அமீன் லோ றிபோட் நூல் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.
நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம், உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சுப் நூலாசிரியர் ஏ.ஜி.எச். அமீன் மற்றும் சட்டத்தரணி பசீர் அஹமட் ஆகியோறும் உரை நிகழ்தினார்கள்.
நூலின் முதற்பிரதியை முஸ்லீம் சலாகுதீன், மற்றைய பிரதியை புரவலர் ஹாசீம் உமர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
‘இந்த நாட்டில் உள்ள பள்ளிவாசல் வக்பு சட்டத்தையும் நாம் நீதி அமைச்சின் ஊடாக மறு சீரமைக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகம், அதன் சொத்துக்கள் சம்பந்தமாக நிறைய வழக்குகள் உள்ளன.
ஒரு பள்ளிவாசலின் சொத்தில் 5 ஸ்டார் ஹோட்டல் கட்டியுள்ளார்கள்.
ஆகவே தான் பள்ளிவசால்களின் சொத்துக்கள், நிர்வாகம் பற்றிய வக்பு சட்டத்தை புனர்நிர்மானம் செய்வதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுப் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவுப் ஹக்கீம்,
‘உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுப், முஸ்லீம் விவாகம் விவகரத்து காதீ நிதிமன்றம் சம்பந்தமாக சமர்ப்பிக்க உள்ள சட்டத்தை பாராளுமன்றத்தில் விவதத்திற்கு விட்டு, பாராளுமன்றத்தில் சமர்பித்து அனுமதி பெறப்படல் வேண்டும்.
அடுத்த மாதமலவில் வரவுசெலவுத் திட்டம் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டே அது சார்த்தியமாகும்’ என தெரிவித்தார்.