Breaking
Mon. Nov 18th, 2024

சவூதி அரேபியாவின் புனித மக்காவில் கடந்த 12-ந்தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. அதில், கட்டிடம் இடிந்து அங்கு மழைக்கு ஒதுங்கிய யாத்திரீகர்கள் உள்பட 107 பேர் பலியானார்கள். 400 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தோருக்கு  சவூதி  அரேபிய மன்னர் சல்மான் நஷ்டஈடு அறிவித்து உள்ளார்.

மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெறும் விரிவாக்க கட்டுமான பணியில் `தி  சவூதி  பின்லாடின் குரூப்’ ஈடுபட்டுள்ளது. இது அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தம்பி பகர் பின்லேடனுக்கு சொந்தமானது.

மஸ்ஜிதுல் ஹராமில் நடந்த `கிரேன்’ விபத்துக்கு தி சவூதி பின்லாடின் நிறுவனமும் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாததால்தான் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக சவூதி அரேபிய அரசு கருதுகிறது.

எனவே, இந்த நிறுவனம் புதிய வேலைகளை எடுத்து செய்ய சவூதி அரேபிய மன்னர் சல்மான் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தற்போது செய்து வரும் பணிகள் குறித்து மறு ஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Post