Breaking
Mon. Dec 23rd, 2024

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி இடம்பெறுகின்றது.

தேசிய அருங்கலைகள் பேரவை, பனை அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்பு நிலையம் ஆகிய நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திகள் மற்றும் ஆக்கப் பொருட்களின் காட்சி கூடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மேலதிக செயலாளர் சுசந்த டி சில்வா, கைத்தொழில் அபிவிருத்திசைபத் தலைவர் நாவாஸ் ரஜாப்தீன், தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்திகீர்த்தி சேன, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் மார்ஷல் ஜனதா, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் நவாஸ் ரஜாப்தீன், வடகடல் நிறுவனத் தலைவர் திஸவீரசிங்க உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடந்த 28ம் திகதி ஆரம்பமான இக்கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், இக்கண்காட்சியினை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Related Post