மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொட்டாதெனிய சேயா என்ற சிறுமி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தூக்கிலிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படும்.
மரண தண்டனைக்கு எதிராக ஜெனீவாவில் சர்வதேச நாடுகள் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர் மங்கள சமரவீரவும் இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உலகின் பல நாடுகளில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் கருத்தை அவர் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.