Breaking
Mon. Dec 23rd, 2024

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் படியும் எமக்கு போதித்துவருவவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்றைய தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பொருநாளையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இந்த பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

இன்று உலகலாவிய முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜூப் பொருநாளை கொண்டாடுகின்றனர்.இந்த தினம் என்பது முஸ்லிம்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடக் கூடியது.இஸ்லாத்தின் ஜம்பெருங்கடமைகளில் ஹஜ் கடமை வசதி படைத்த தனவந்தர்களுக்கு இன்றியமையாதது,இந்த நிலையில் நபி இப்றாஹீம்(அலை)அவர்கள் செய்த தியாத்தின் வடிவாக இன்று இந்த ஈகைத் திருநாளை நாம் கொண்டாடுகின்றோம்.

இன்றைய தினத்திலிருந்து கருணை,அன்பு,தியாகம்,ஏனைய மதத்தை மதிக்கும் பண்புகள் என்பனவற்றை எமது வாழ்வில் கொண்டுவரம் தினமாக நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூனும் நாளாக மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.அதே வேளை இன்றைய ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் தனது பொருநாள் வாழத்துக்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Post