Breaking
Wed. Nov 20th, 2024

கொட்­ட­தெ­னி­யாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறு­மியின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் துனேஷ் பிரி­ய­சாந்த எனப்­படும் கொண்­டயா பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில் நேற்று விசேட பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.

நீர்­கொ­ழும்பு சிறைச் சாலையில் இருந்து சிறை அதி­கா­ரி­களால் பொர­ளையில் உள்ள ஜீன் டெக் நிறு­வ­னத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட அவர் அங்கு விசேட மருத்­துவ நிபு­ணர்­களால் விசேட பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

கொண்­டயா எனப்­படும் சந்­தேக நபரின் உடலின் பல பாகங்கள் தொடர்பில் டீ.என்.ஏ.அறிக்­கையைப் பெற்­றுக்­கொள்­ளவே நேற்று அவரை ஜீன் டெக் நிறு­வ­னத்தின் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தாக சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் ரோஹண புஷ்­ப­கு­மார உறு­திப்­ப­டுத்­தினார்.

இதன் போது சந்தேக நபருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post