உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
எதிர்வரும் 2 வருடங்களுக்கு நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியகட்சியும், சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்துள்ளன.
இதன்மூலம் கட்சிகளுக்கு இடையிலான பேதம் களையப்படுகிறது. எனினும், இதன் அர்த்தம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதாக கருத முடியாது. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டி உள்ளது.
இந்தநிலையில், தேசிய அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியே தேர்தலில் போட்டியிடும். இந்த தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.