Breaking
Fri. Nov 15th, 2024

இது ஒரு அரபுதேச மார்க்க அறிஞரின் உரையிலிருந்து தமிழாக்கம் பண்ணியது. இன்ஷா அல்லாஹ் இறுதி வரைப் படியுங்கள். நம் வாழ்க்கைக்கு, மறுமை வெற்றிக்கு பயனுள்ளது.

நான் இங்கே கூறுவது மக்கள் நேரடியாக பார்த்து என்னிடம் பகிர்ந்த ஒரு உண்மைச் சம்பவம். இளைஞர்களே, சகோதரிகளே நன்றாக கூர்ந்து கவனியுங்கள். சில மாதங்களுக்கு முன்பாக சாலை விரிவாக்கம் பணியில் ஒரு குழு வேலை செய்து வந்தது. அந்த சாலை ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்தை இணைப்பதாக இருந்தது, இடையில் அந்த சாலை சில சிறிய நகரங்கள் வழியாக சென்றது. அவர்கள் அப்போது ஷும்ரன் என்ற சிறிய ஊரை அடைந்தனர். அந்த ஊரை அடைந்ததும் சாலை செல்ல வேண்டிய இடத்தில் பழைய மையவாடி ஒன்று இருந்தது. சாலையை மேற்கொண்டு கொண்டு செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது. சாலை போடும் நிர்வாகம், அந்த ஊரின் நீதிமன்றத்தை அணுகி அந்த பழைய மண்ணறைகளை அங்கிருத்து அகற்றி வேறு இடத்தில் புதைக்க அனுமதி வேண்டியது.

மார்க்க அறிஞர்களின் ஆலோசனைக்குப் பின்பாக அங்குள்ள மண்ணறைகள் தோண்டி வேறு இடத்தில் மீண்டும் புதைப்பதற்கு அனுமதி கொடுக்கப் பட்டது. கடைசியாக முப்பது வருடங்கள் முன்பாக ஒரு மனிதரை அங்கு அடக்கி உள்ளனர். அதன் பின்பு அந்த இடத்தில் யாரும் அடக்கம் செய்யப் படவில்லை. இனி மிகக் கவனாக கேளுங்கள். அங்கு அடக்கப் பட்டவர்களின் சொந்தங்கள் அனுமதி மற்றும் மார்க்க அறிஞர்கள் அனுமதியின் பேரில் ஒவ்வொரு குழியாக தோண்டி மக்கிப் போன எலும்புகளாக தோண்டி எடுக்கப் பட்டு, வேறு இடத்தில் அவைகள் அடக்கம் செய்யும் பனி ஆரம்பமானது. ஒவ்வொரு கப்றைத் தோண்டும் போதும் மூக்கை துளைக்கும் துர்நாற்றம் அங்கு வீச ஆரம்பித்தது. கடைசி மையத்து 30 வருடங்கள் முன்பு அடக்கம் செய்யப் பட்டது. அப்போது ஒரு கபரை தோண்டியவர்கள் திடீரென அப்படியே நின்று விட்டனர். கபரை விட்டு வெளியே வந்து உரக்கத் தக்பீர் கூற ஆரம்பித்து விட்டனர்.

அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்…

அவர்கள் அங்கு கண்ட காட்சி, அந்த மையத்து அப்போது அடக்கியது போன்று அப்படியே, துணிகள் வெண்மையாக, துணிகள் திறக்கப் படாமல், அந்த மையத்திலிருந்து நல்ல சுகந்தமும் வீசியது, அப்போதுதான் அந்த மையத்தை குழியில் வைத்தது போன்று. அல்லாஹு அக்பர். அவர்கள் அந்த மையத்தை வெளியில் எடுத்தனர் தக்பீர் கூறியவாரே. யா அல்லாஹ்! யா அல்லாஹ் என்றாவரே ஒவ்வொருவரும். அவர் யார் என்று அறியும் ஆவலில் முகத்தை திறந்தனர். அங்கிருந்த ஊர் மக்கள் கூறினார் இவர் இந்த மனிதர், இன்னாருடைய மகன், 30 வருடம் முன்பாக அடக்கப் பட்டவர் என்பதாக. மக்கள் சாட்சி பகின்றனர் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் முகம் மாறவில்லை, உடலும் மாறவில்லை, துணிகளும் மாறவில்லை. 30 வருடம் முன்பு எப்படி அடக்கப் பட்டாரோ அப்படியே உள்ளார் என்பதாக.

அல்லாஹு அக்பர்… அந்த உடலை தூக்கிக் கொண்டு, வயது முதிர்ந்த தந்தையிடம் காட்டச் சென்றனர். அவர் தந்தையின் மடியில் மகனது மையத்தை கடத்தினர். அல்லாஹு அக்பர், முகத்தை பார்த்த அவர் யா அல்லாஹ் 30 வருடம் கழித்து எனது மகனை அடக்கிய போது எப்படி இருந்தாரோ அப்படியே என்னிடம் கொண்டுவந்துள்ளாயே எனக் கூறி அல்லாஹ்வை புகழ்ந்தார். பின்பு அந்த மையத்தை வேறு இடத்தில் அடக்கி விட்டு, மீண்டும் அந்த தந்தையை காண வந்தனர். அவரிடம் கேட்டனர். தந்தையே 30 வருடம் ஆகியும் சிறிய மாற்றம் கூட இல்லாதிருக்க என்ன காரணமாக இருக்கும்? இன்று அடக்கியது போன்று அந்த நறுமணம் அவர் உடலிலிருந்து வீசியதே? அவர் எப்படிப் பட்ட அமல்கள் செய்தவராக இருந்தார் என்பதாக. உங்கள் மகன் எப்படி இறந்தார் என கேட்டனர். கேளுங்கள் இளைஞர்களே, தொழுகையைப் புறக்கணிக்கும், தொழுகையில் கவனமின்றி இருக்கும் ஒவ்வொருவரும் உன்னிப்பாக கேளுங்கள் இதை.

தந்தை கூறினார் எனது மகன் ஒரு போதும் தொழுகைக்கு பிந்திச் செல்பவராக இருந்ததில்லை. பாங்கோசை கேட்டதும் பள்ளிவாசலில், முதல் வரிசையில் இருப்பார். மேலும் கூறினார், ஒரு போதும் நான் அவரை பfஜர் தொழுவதற்கு எழுப்புபவனாக இல்லை. நான் எழும்பும் முன்பே அவர் எழுந்து தயாராகி இருப்பார் பfஜர் தொழுகைக்கு. அல்லாஹ்வின் மீதாணையாக எனது மகன் அவரது தொழுகையில் கவனம் செலுத்துபவராக இருந்தார். தொழுகையை பேணி வந்தார். தொழுகையை நேரம் தவறாது தொழுது வந்தார். அந்நிலையிலேயே மரணிக்கவும் செய்தார் என்பதாக. அல்லாஹு அக்பர்…
இது தான் காரணாமாக இருக்கும் 30 வருடமாகியும் அவரது உடல் எந்த பாதிப்பும் இல்லாமல், இன்றும் நல்ல அழகிய வாசனையுடன் என்றார்கள். அல்லாஹு அக்பர். அல்லாஹ்வின் மீதாணையாக நாம் ஒரு போதும் வெற்றிப் பெறவே இயலாது நமது தொழுகையை நாம் பேணாத வரை. இந்த TVகளோ, internetகளோ புட்பால் விளையாட்டுகளோ எந்த பயனும் ஏற்ப்படுத்தப் போவதில்லை நிச்சயமாக. நமக்கு எந்த பயனும் வரப்போவதில்லை நமது இதயங்கள் அல்லாஹ் அல்லாத மற்ற விசயங்களில் காதல் வயப்பட்டிருந்தால்.

அல்லாஹு அக்பர்… நெஞ்சை தொடும் உண்மைச் சம்பவம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஒவ்வொருவர் நெஞ்சை அல்லாஹ்வின் புறத்தில் முழு நேரமும் ஈர்ப்பு உள்ளதாக ஆக்குவானாக.

அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் பேணி செய்து, அவன் பாதையிலேயே வாழ்ந்து, அவன் பொருத்தத்துடன் மரணித்து, மறுமையில் வெற்றி பெற்றோர் கூட்டத்தில் ஆக்கி அருள் புரிவானாக.

ஆமீன்… ஆமீன்.. யா ரப்பில் ஆலமீன்…

Related Post