Breaking
Mon. Dec 23rd, 2024

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –

திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ராஜித சேனாரத்ன,வாசுதேவ நாணயக்கார எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சுகாதார கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இந்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.நாடு தழுவிய முறையில் தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்கள் இதனை பெற்றுக் கொண்டனர்.கைத்தொழில்,வணிகத துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள கூட்டுறவு சங்க செயற்பாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள்,அரச அதிகாரிகள்,உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையிலான இந்த அமைச்சின் செயற்பாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ri1.jpg2_1 ri1 (1)

Related Post