– அப்துல் மலிக் சரீப் –
பலவருடங்கள் அனுபவம் வாய்ந்த ஹஜ் வழிகாட்டியான அல் ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்களின் தலைமையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள RJ Travels உரிமையாளரான அல் ஹாஜ்.எம். ஜே.எம். ரிஸ்விஅவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டஹஜ் குழு நேற்று நாடு திரும்பியது. இக்குழுவை வரவேற்பதற்காகவும் அவசரமாக ஹாஜிகளை விமானநிலையத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும் ஜித்தா சர்வதேச விமான நிலையமூத்த அதிகாரியானஎம். எச.;முஹம்மத் ரிள்வான் அவர்கள் சமூகமளிதிதிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக் குழுமக்காவில் நடந்த’கிரேன்’அசம்பாவிதம் நடந்த இடத்தை நேரடியாகச் சென்றுபார்வையிட்டதுடன் புனித கஃபாவிலும் அரபாவிலும் இலங்கை முஸ்லிம்களுக்காகவும் முழு உலக முஸ்லிம்களுக்காகவும் முழு மனிதசமுதாயத்தின் ஹிதாயத்துக்காகவும் விசேட துஆ பிரார்த்தனை செய்தார்கள். இந்தகுழுவில் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஹஜ் விளக்கவுரைகள் நடப்பதால் லண்டனைச் சேர்ந்தஅனேகமான இலங்கையைச் சேர்ந்த ஹாஜிகள் இக்குழுவில் சென்றிருந்தனர் மினாவில் சனநெரிசல் அசம்பாவிதம்நடந்தநேரம் இக்குழுபெரிய ஜமராத்தில் கல்எறிந்துகொண்டிருந்தது. அல்லாஹ்வின் உதவியால் அனுபவம் வாய்ந்தவழிகாட்டியான அல் ஹாஜ் அமானுல்லாஹ் கமால்தீன் அவர்கள் ஹாஜிகளைகுகைவழியாக கூடாரத்துக்குபாதுகாப்பாகஅழைத்துச் சென்றதால் ஹாஜிகள் மயிரிலையில் உயிர் தப்பினர். இக்குழுவில்; இலங்கை ஹாஜிகளுடன் பல் வேறுநாட்டைச் சேர்ந்தசுமார் நாணூறு ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றினர. அனைத்து ஹாஜிகளும் திருப்திகரமாக தமதுகடமைகளைநிறைவேற்றி நாடு திரும்பியிருக்கிறார்கள.; இன்சா அல்லாஹ் எதிர்வரும் வருடங்களில் மேலும் இலங்கையை சேர்ந்தஹாஜிகள் இக்குழுவில் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.(mn)