மின்மினி பூங்கா அமைக்கும் சீனாவின் கனவு நிறைவேறியுள்ளது. மத்திய சீனாவின் வுஹான் நகரில் இந்த மின்மினிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒளியைக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பூங்கா 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
பறக்கும் பகுதி, கவனிக்கும் பகுதி, தொலைவில் இருந்து பார்க்கும் பகுதி, இனப்பெருக்கப் பகுதி, அறிவியல் விளக்கப் பகுதி என்று பிரிக்கப்பட்டு, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. இங்கே பார்வையாளர்கள் தவிர, ஆராய்ச்சியாளர்களும் பெருமளவில் வருகிறார்கள். இங்கிருந்து மின்மினிகளை விலைக்கு வாங்கிக்கொண்டும் செல்ல முடியும்.
பூச்சிகள் வாழக்கூடிய இயற்கை வளங்கள் குறையும் நேரத்தில் இப்படிப்பட்ட பூங்காக்கள் பூச்சிகளுக்கு நன்மை அளிக்கின்றன.
இங்கிருந்து உற்பத்தியாகும் மின்மினிப்பூச்சிகளை ஒரு ஜாடியில் அடைத்து, பல்வேறு இடங்களுக்கும் இணையம் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள். மே மாதம் முதல் ஒக்டோபர் வரை இந்தப் பூங்கா திறந்திருக்கும். மீண்டும் அடுத்த ஆண்டு மே மாதம் திறக்கப்படும்.