டி.ஏ. ராஜபக்ஸ அமைப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையை பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேறும் எந்தவொரு பணிக்காகவும் குறித்த காணி பயன்படுத்தப்பட மாட்டாது என நிபந்தனையை மீறி ராஜபக்ச அமைப்பு, சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவைக்கு காணிகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து விசேட விசாரணை நடத்தப்பட உள்ளது. நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் குறித்த காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மஹிந்தவும் அவரது புதல்வர்களுமே மேற்கொண்டுள்ளனர் எனவும் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.