நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.