சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையிலுள்ள இன்டி பென்டன் ஆர்கேட் கட்டடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் தொட்டியில் உள்ள மீன்களை பராம ரிப்பதற்கு வருடாந்தம் 300 இலட்சம் ரூபா தேவைப் படுகின்றது. ஒரு மீன் 65 ஆயிரம் ரூபா பெறுமதியானது. குறித்த மீன்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண மற்றும் மாநகர அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இவ்வாறான நகர அபிவிருத்திகளையே முன்னைய அரசாங்கம் முன்னெடுத்தது. எனினும் எமது அர சாங்கத்தில் மேல் மாகாணத்தை பாரிய நகரமாக உருவாக்கவுள்ளோம். இதன்படி துறைமுக மாநகரம், விமான மாநகரம் மற்றும் தொழில்நுட்ப மாநகரங்களை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக குடியிருப்பு தின வைபவம் நேற்று மாளி காவத்தை பிரதிபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மேல் மாகாணம் முழுவதையும் பாரிய மாநகரமாக மாற்றவுள்ளோம். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் பிரமாண்டமான அபிவிருத்தித் திட்டமாக மேல் மாகாண அபிவிருத்தி அமையும்.
இதற்கமைய துறைமுக மாநகரம் கரை யோர பிரதேசத்தை மையமாகக் கொண்டும், விமான மாநகரம் கட்டு நாயக்க பிரதேசத்தை மையமா கக் கொண்டும் தொழில் நுட்ப மாநகரம் ஹோமாகம பிரதே சத்தை மையமாகக் கொண்டும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.
மேலும் முன்னைய அரசாங்கம் நகர அபிவிருத்தி என்ற பெயரில் பாரிய வீண்விரயங்களையே செய்தது. இதற்க மைய சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையி லுள்ள இன்டிபென்டன் ஆர்கேட் கட்டடத்தில் நிர்மாணிக் கப்பட்டுள்ள மீன் தொட்டியில் உள்ள மீன்களை பராமரிப்பதற்கு வருடாந்தம் 300 இலட்சம் ரூபா தேவைப்படுகின்றது.
ஒரு மீனுக்கு 65 ஆயிரம் ரூபா வழங்கி கொள்வனவு செய்துள்ளனர். குறித்த மீன்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத னால் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மீன் தொட்டியின் கண்ணாடி ஒன்று 67 இலட்சம் ரூபா பெறுமதியானது என்றார்.