– இக்பால் அலி –
புனித ஹஜ் யாத்திரைக்காகச் சென்று காணாமற் போனதாகப் பேசப்படும் தம்பதிகளில் கணவருடைய ஜனாஸா இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த அபூபக்கர் அப்துல் அஸீஸ் மற்றும் அவரது மனைவி ரொசான் ஹாரா அப்துல் அஸீஸ் ஆகிய இருவரும் அங்கு காணமாற் போனதாக பேசப்பட்டு வந்தது. இவர்களை தேடும் நடவடிக்கையில் ஹஜ் குழு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின் போது மக்காவிலுள்ள மொஹ்சீனில் வைக்கப்பட்டிருந்ததை இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை இலங்கைக்கான ஜித்தாவிலுள்ள உதவிக் கவுன்சிலர் அன்சார் மற்றும் முஸ்லிம் சமயக் கலாசாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அன்வர் அலி அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் சகிதம் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையைப் பார்த்து ஊர்ஜிதம் செய்துள்ளனர். இவரது ஜனாஸாவை நல்லடக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் அவரது மனைவியை தேடும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.