Breaking
Tue. Dec 24th, 2024

சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பாலியல் வன்­மு­றைகள் மற்றும் அதன் பின்­ன­ரான படு­கொ­லைகள் உள்­ளிட்ட குற்றச் செயல்­க­ளா­னது உலக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கையில் மிகவும் குறை­வாகும்.

எனவே இப்­ப­டி­யான குற்றச் செயல்­க­ளுக்கு மரண தண்­டனை இறுதித் தீர்­வாக அமைந்­து­வி­டாது என்று அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­ம­யவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்­ன தேரர் நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்­வின்­போது ஆளும் கட்சி எம்.பி.யான ஹிரு­ணிக்கா பிரே­மச்­சந்­தி­ர­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தான சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் பாலியல் வன்­முறை அதன் பின்­ன­ரான கொலை ஆகி­ய­வற்­றுக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்ற ரீதி­யி­லான சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் பாலியல் வன்­முறை, கொடூ­ர­மான கொலைகள் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. இத்­த­கைய குற்றச் செயல்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்றே இங்கு வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

எனினும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பாலியல் வன்­முறை மற்றும் அதன் பின்­ன­ரான படு­கொ­லை­களைப் பொறுத்­த­வ­ரையில் இவை உலக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கையில் மிகக் குறை­வா­ன­வையே.

பௌத்த மதத்­தை தழு­வு­கின்ற இந்­தோ­னே­ஷி­யாவில் இவை அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. அதே­போன்று இந்­தி­யா­விலும் இந்­நிலை அதி­க­மா­னது.

இன்று எமது நாட்டில் மரண தண்­டனைக் கைதி­க­ளாக ஆயி­ரக்­க­ணக்­கானோர் இருக்­கின்­றனர். இவர்­களில் பெரும்­பா­லானோர் காணி விவ­காரம் மற்றும் காதல் விவ­காரம் ஆகி­ய­வற்றில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றனர். மாறாக சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­காகவோ அல்­லது பாலியல் வன்­முறைக் குற்­றத்­துக்­கா­கவோ அல்ல.

ஆகவே எமது நாட்டில் இடம்­பெ­று­கின்ற இத்தகைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனை இறுதித் தீர்வாக அமைந்துவிடாது. மாறாக எமது நாட்டின் கலாசாரம், கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும், சமுதாயச் சீர்கேடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

By

Related Post