– எம்.ஏ.றமீஸ் –
இம்முறை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் அதிகப்படியானனோர் சித்தியடைந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தில்; முதன் நிலை பெற்று வரலாற்றுச் சாதமை படைத்துள்ளனர் என அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார்.
இப்பரீட்சையில் தோற்றிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 பேர் புலமைப் பரிசில் பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் முகம்மட் றஜாப் பாத்திமா ஹதானி 179 புள்ளிகளைப் பெற்று வலயத்தின் முதன் நிலை பெற்று பாடசாலையின் வரலாற்றுச் சாதனை ஏற்படுத்தியுள்ளார்.
தஸ்லிம் பாத்திமா ஹிமா-178 புள்ளிகளையும், அஷ்ரஃப் அனப் அஹமட்-176 புள்ளிகளையும், ஆப்தீன் றுசைக் அஹமட்-174 புள்ளிகளையும், அஹமட் நசீல் முகம்மட் நாமிக் சிமல்-172 புள்ளிகளையும், அப்துல் கபீர் நப்லி அஹமட்-170 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
இப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களான எம்.ஏ.சீ.அஹமட் சுஹைர், ஏ.எல்.ஏ.றஃமான், எம்.ஏ.சலாஹுதீன், எம்.வை.சம்ஹுதீன், ஆர்.எஸ்.எஸ்.றினோல் டெசி ஸ்பக் ஆகியோருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் தமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் ஏ.எல்.அன்வர் மேலும் தெரிவித்தார்.