ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தில் ஆசிய பசுபிக் நகர நிர்மாண திட்டம் 2015 போட்டியில் ஜூரியின் விஷேட விருது பலாங்கொட நகர சபைக்கு கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பல நாடுகளில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஜூரிஸ் விஷேட விருதுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது.
குறித்த விருது யூ.என். ஹெபிடாட் அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் உலக குடியிருப்பு சங்க நன்கொடை நிதியினைப் பயன்படுத்தி பலாங்கொட நகரத்தின் தொரவல ஓய அபிவிருத்தி செய்த ரெஸிலியன்ஸ் செயற்திட்டத்திற்கானதாகும்.
ஜூரியின் விஷேட விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக பலாங்கொட நகர சபையின் செயலாளர் எம்.எஸ்.சீலாவதியும் அவருடன் இணைந்து அந்த நகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகரும், பலாங்கொட நகர சபையின் ரெஸிலியன்ஸ் செயற்திட்டத்தின் செயலாளர் நிமல் பிரேமதிலக உள்ளிட்ட குழுவினர் இம் மாதம் 27ஆந் திகதியளவில் ஜப்பானுக்கு செல்லவுள்ளனர்.