வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கொன்றை வைத்திருந்த 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.
குறித்த சிறுவன் ‘வவுனியா பொடியன்’ என்ற பெயருடன் பேஸ்புக்கில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் புகைப்படங்களை பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்த, மேற்படி சிறுவனை வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.