Breaking
Wed. Dec 25th, 2024

கிராண்ட்பாஸ் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் போதைப் பொருள் விநியோகம் செய்­து­வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ‘பொடி சூட்டி’ என்­பவரை கொழும்பு துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் கீழுள்ள துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு முன்­னெ­டுத்த விசேட நட­வ­டிக்கை ஒன்றின் போதே 20500 மில்­லி­கிராம் ஹெரோயின் போதைப் பொரு­ளுடன் சந்­தேகநப­ரான குறித்த பெண் ஸ்டேட் வீதியில் வைத்து கைதுசெய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இவ்­வாறு கைதுசெய்­யப்­பட்ட குறித்த பெண் கிராண்ட்பாஸ், ஸ்டேட் புர பிர­தே­சத்தைச் சேர்ந்த 29 வய­து­டை­யவர் எனவும் கடந்த 10 வரு­டங்­க­ளாக போதைப்பொருள் விற்­பனை மற்றும் விநி­யோ­கத்தில் ஈடு­பட்டு வரு­பவர் எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந் நிலையில் கைதான ‘பொடிசூட்டி’ என அறி­யப்­படும் குறித்த சந்­தேகநபரை மாளி­கா­கந்த நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ ப­டுத்­தி­யுள்ள பொலிஸார் 7 நாள் தடுப்புக் காவல் உத்­த­ரவைப் பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.

By

Related Post