Breaking
Thu. Dec 26th, 2024
“ஷரிஆ” சட்­டத்தை இச் சபையில் எதிர்த்­த­வர்கள் இன்று மரண தண்­ட­னை எமது நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென இச் சபையின் பிரே­ர­ணையை முன்­வைப்­பதன் மூலம் பரஸ்­பர விரோத அர­சி­யலை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர் என பிர­தி­ய­மைச்சர் டிலான் பெரேரா நேற்று சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற குற்­ற­வியல் கரு­மங்­களில் சீனா­வுடன் பரஸ்­பர உத­வி­ய­ளித்தல் தொடர்­பான கட்­ட­ளைகள் மீதான விவா­தத்தில் உரை­யாற்­றும்­போதே பிர­தி­ய­மைச்சர் டிலான் பெரேரா இவ்­வாறு தெரி­வித்தார். பிர­தி­ய­மைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­வா­வாரா? அனுர திஸ­நா­யக்க எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வா­வாரா? என எவரும் கனவு கூட கண்­டி­ருக்­க­மாட்­டார்கள்.
ஆனால் கனவு விடயம் இன்று நன­வா­கி­யுள்­ளது. இதற்கு இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து இணக்­கப்­பாட்டு ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­யதே இவ்­வா­றான வர­லாற்று மாற்­றத்தை கனவு காணாத மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடிந்­தது.
எனவே இனியும் இதனை கட்சி நிறக்­கண்­ணா­டி­களால் பார்க்­காது யதார்த்­தத்தை புரிந்து எதிர்ப்­ப­வர்கள் செயற்­பட வேண்டும். இது ஒரு புதிய அர­சியல் கலா­சா­ர­மாகும்.
அன்று ரிஷானாவை சவூ­தியில் தூக்­கி­லி­டப்­பட்ட போது “ஷரிஆ” சட்­டத்தை இச் சபையில் எதிர்த்­த­வர்கள் இன்று இச் சபையில் மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்த வேண்­டு­மென பிரே­ர­ணையை முன்­வைக்­கின்­றனர். இதுதான் பரஸ்­பர அர­சியல் விரோதச் செயற்­பா­டாகும்.
சட்­டங்கள் விரை­வாக செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும். சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள், பெண்கள் மீதான பாலியல் வன்­மு­றைகள், கொலைகள் போன்ற குற்றச் செயல்கள் தொடர்­பாக நீதி­மன்ற விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­ப­டும் சட்­டங்கள் இயற்­றப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குற்றம் ஒழிக்கப்பட வேண்டும் குற்றத்தை தூக்கிலிட வேண்டும் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

By

Related Post