Breaking
Thu. Dec 26th, 2024

அரசியலமைப்பு பேரவை வெகுவிரைவில் கூடவுள் ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த வாரமளவில் கூடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கவுள்ள தாகவும் குறிப்பிடுகின்றது.

அரசியலமைப்புப் பேரவை கூடுவது தொடர் பில் கடந்த வாரத்தில் இருந்து அதிகளவில் எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரமளவில் பேரவை கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசாங் கம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக பிரதமர் நாட்டில் இல்லாத காரணத்தினால் அரசியலமைப்புப் பேரவை கூட முடியாது போனதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போது எழுந்துள்ள ஒருசில முக்கிய பிரச்சி னைகள் தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் பேசி தீர்மானமெடுப்பது தொடர்பில் கருத்து முன் வைக்கப்பட்டது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத காரணத்தினாலேயே அரசியல மைப்பு பேரவையைக் கூட்டமுடியாது போனதற்கான முக்கிய காரணமாகும். முன்னைய அரசாங்கத்தில் பிரதமர் பொம்மை போன்று செயற்பட்டதனால் நாட்டின் தீர்மானங்களை எடுப் பதில் முக்கியத்துவம் இருக்கவில்லை. ஆனால் இப்போது அவ்வாறு அல்ல. பிரதமரின் தீர்மானங்கள் மிகவும் முக்கியமானது. அவ்வாறான நிலையில் வெகுவிரைவில் அரசியல மைப்பு பேரவையைக் கூட்டி தீர்மானங்கள் எடுக் கப்படும்.
பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு அமைய அடுத்த வாரமளவில் அரசியலமைப்பு பேரவையைக் கூட்டமுடியும் என அவர் குறிப்பிட் டார்.
அரசியலமைப்புப் பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் மக்கள் பிரதிநிதிகள் ஏழு பேரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவரும் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post