Breaking
Tue. Dec 24th, 2024

படத்தில நீங்கள் பார்க்கும் நண்பரின் பெயர் அப்துல் வஹாப் வயது 25 பங்களாதேசை சார்ந்தவர் சவுதி அரேபியாவின் அல்பாஹா நகராட்சியில் துப்பரவு தொழிலாழியாக பணியாற்றியவர்

இவர் தனது நிறுவன பணியான வீதிகளின் குப்பைகளை பொறுக்கி வீதகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது சவுதி நாட்டவர் ஒருவர் அவரை பற்றி விசாரிக்கிறார்

அந்த துப்பரவு தொழிலாழி தாம் திருகுர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் என்று தெரிவிக்கிறார்

ஆச்சிரியமடைந்த சவுதி நாட்டவர் திருகுர்ஆனை முழுமையாக மனதில் சுமந்து கொண்டு நீன் ஏன் இந்த துப்பரவு பணியை செய்து கொண்டுள்ளாய் என கேட்டு விட்டு அவரை திருகுர்ஆனை ஓதி காட்ட சொல்கிறார்

துப்பரவு தொழிலாளியாக பணி செய்து கொண்டிருந்து அப்துல் வஹாப் அழகான குரலில் குர்ஆனை ஓதி காட்டுகிறார்

அதை பதிவு செய்து கொண்ட அவர் அவர் ஓதும் காட்சியையும் அவர் துப்பரவு பணியாளராக பணிசெய்யும் தகவலையும் சமூக வலை தளங்களில் பதிவிடுகிறார்

சமூகவலை தளங்களில் அந்த தகவலை பார்வையிட்ட அல்பாஹா நகராட்சியின் பொறியாளர் குறிப்பிட்ட துப்பரவு தொழிலாளியை அணுகி அவரை துப்பரவு தொழிலாளி என்ற பணியிலிருந்து மாற்றி நிறுவனத்தின் பள்ளியின் இமாமாக நியமனம் செய்தார் அந்த காட்சிகளை தான் படங்கள் விளக்குகிறது

By

Related Post