மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாக வாழ முற்படும் போது பொதுபல சேனா இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்கின்றது அரசு.
இந்த அமைப்பை கட்டுப்படுத்தாது பாராமுகமாக செயற்படுகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டினார்.
பொதுபல சேனா இனம் தெரியாத நபர்களை வைத்து அமைச்சர் ராஜித சேனரத்ன, மன்னார் ஆயர் இராயப்பர் ஜோசப் மற்றும் என்னையும் சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்த அமைப்பு நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு சாபக்கேடாகும்.
அளுத்கம தர்கா நகர் பேருவளை சம்பவங்களுக்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளரே காரணமாகும். இவரின் பேச்சுக்களே இப்பகுதிகளில் வன்முறை ஏற்படக் காரணமாக இருந்ததென பலர் முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் இவர் மீது விசாரணை நடத்தவில்லை.
காலங் காலமாக இணைத்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பௌத்த முஸ்லிம் சமூகங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த பொதுபல சேனா முயற்சிக்கின்றது. இது குறித்து அரசாங்கமும் பாராமுகமாக இருந்து வருவது வருந்தத் தக்கது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.