Breaking
Tue. Dec 24th, 2024
தேர்தல் தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு வந்து அங்கு வரிசையில் நின்றிருந்த பெண் ஒருவரை தாக்கினார் என்று நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் ஆரம்பமாகின.

இதன்போது விசேட அதிரடிப்படையை சேர்ந்த தமித் சுரங்க என்பவர் சாட்சியமளித்தார். இவரே பாரத லக்ஸ்மன் உட்பட்ட நான்குபேர், கொலை தொடர்பான வழக்கின் முதலாவது சாட்சியாவார்.

இந்தநிலையில் நேற்று அவர் மூன்று நீதிபதிகளை கொண்ட விசேட ட்ரயல் அட் பார் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

ராஹுல கல்லூரியில் வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வாகனம் ஒன்றில் வந்திறங்கிய துமிந்த சில்வா, அங்கு நின்ற மூன்று பெண்களை பார்த்து யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டார்.

இதன்போது தாம் சோலங்கராச்சிக்கே வாக்களித்ததாக ஒரு பெண் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அந்தப் பெண் மீது துமிந்த சில்வா தாக்குதல் நடத்தினார் என்று சாட்சி குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள துமிந்த சில்வா உட்பட 13 பேரும் நேற்று மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TW)

By

Related Post