ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடும் இதனை தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார,எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியாக நாம் களமிறங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,எதிர்காலத்தில் மைத்திரி, ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு எதிராக எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
உள்ளூராட்சி தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்கட்சியாக இணைந்து நாம் போட்டியிடுவோம். மைத்திரி எந்தச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கினாலும் நாம் அதனை எதிர்ப்போம். ஐக்கிய தேசிய கட்சியையும் எதிர்ப்போம். எமது இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
அதேவேளை தேசியப் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் இடது சாரிகளின் கொள்கையினை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்துவோம்.ஆனால் நாட்டின் இறைாயான்மை தொடர்பில் பிச்சினை ஏற்படும்போது ஒன்றுபட்டு செயற்படுவோம் அதில் பின்நிற்க மாட்டோம்.