கொடதெனியாவ சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த வழக்கு தொடர்பில் கைதாகி தானே குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ள கொண்டையாவின் சகோதரர் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கொண்டைய்யாவின் சகோதரராக சமன் ஜெயலத்தின் மரபணுப் பரிசோதனை அறிக்கை, சிறுமியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுக்களுடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கில் முதலில் கைதான 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவரின் மரபணுப் பரிசோதனை அறிக்கைகளும் குற்றத்துடன் ஒத்துப் போகாமையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் கொண்டைய்யாவின் மரபணுப் பரிசோதனை அறிக்கையும் குற்றத்துடன் ஒத்துப் போகாவில்லை என, அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே அவரை குறித்த குற்றத்தில் இருந்து விடுவித்து மினுவான்கொட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எனினும் அவர் மீதுள்ள வேறு சில குற்றங்களுக்காக கொண்டைய்யா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் அத்தனகல்ல மற்றும் கம்பஹா ஆகிய நீதிமன்றங்களில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
-AD-