Breaking
Sat. Nov 16th, 2024

இவ்­வ­ரு­டத்தின் முதல் ஒன்­பது மாதங்­களில் வீதி விபத்­துக்­க­ளினால் 2,200 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த வருடம் இதே மாத காலப்பகுதியில் 349 பேரே உயிர் இழந்­துள்­ளனர் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வீதி விபத்­துக்­களின் அதி­க­ரிப்பை கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து தேசிய வீதிப் பாது­காப்புச் சபையில் நடை­பெற்ற கூட்­ட­ மொன்றில் அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2014ஆம் ஆண்டு 36,050 வீதி விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ள­துடன் அவற்றில் 2,440 பேர் மர­ணித்­துள்­ளனர். 6,847 பேர் கடு­மை­யான காயத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.
இப்­ப­தி­வு­களை ஒப்­பிட்­டுப்­பார்க்­கையில் வீதி விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான தேசிய மட்­டத்­தி­லான அவ­சர நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­க­பட வேண்­டி­யுள்­ள­து என அவர் குறிப்பிட்டார்.

-ET-

By

Related Post