Breaking
Sun. Jan 5th, 2025

உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, 7 வயது சிறுமியை, ஒருவர் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியையே குறித்த நபர் மீட்டுள்ளார்.

கரும்பு தோட்டத்திற்குள் சிறுமி ஒருவரின் அழுகுரல் கேட்டதாகவும், இதனையடுத்து விரைந்து செயற்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

விசாரணையில், சிறுமியின் பெயர், தனு என்பது தெரிய வந்துள்ளது, சில தினங்களுக்கு முன், தன்னை ஒரு தம்பதி அழைத்து சென்றதாகவும், அவர்கள் தன் கழுத்தை நெரித்து கொல்லமுயன்று, பின் மண்ணில் புதைத்ததாகவும், சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் தாய்க்கும், இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தலை மறைவாகியுள்ளார்.

Related Post