Breaking
Sun. Nov 17th, 2024

இன்னும் மனிதர்கள் குறைந்த தொகைக்கே தினக்கூலியாக கிடைப்பதால்தான் எந்திரங்கள் பெரிய அளவில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், இந்தப் பணிகளையும் விரைவில் ரோபோக்களே கைப்பற்றப் போகின்றது.

ஆனால், சாம்சங் நிறுவனம் தற்போது தென் கொரியாவின் வர்த்தகம், தொழில் மற்றும் சக்தி அமைச்சகத்துடன் இணைந்து 6.75 பில்லியன் அமெரிக்க டாலரில் ஒரு புராஜெக்ட்டை தொடங்கியுள்ளது. இதில், குறைந்த செலவில் ரோபோக்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இதனால், மாபெரும் தொழில் நிறுவனங்களில் தற்போது மிகக்குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளை இந்த ரோபோக்கள் விரட்டி அடிக்கும் என கருதப்படுகின்றது. குறிப்பாக சீனத் தொழிலாளிகளை வேலையிலிருந்து துரத்தவே இந்த ரோபோக்கள் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த ரோபோக்கள் தயாரிப்பு வெற்றியடைந்தால் தென் கொரிய நிறுவனங்கள் ஐபோன்கள் அசெம்பல் செய்வது போன்ற பணிகளுக்கான காண்ட்ராக்ட்களை தாமே எடுக்கும். சீன தொழிற்சாலைகளில் தற்போது நடைபெற்று வரும் இந்தப் பணிகள் முடங்கிப் போகலாம் என நம்பப்படுகின்றது.

இது பண முதலைகள் மேன்மேலும் ரோபோக்களைக் கொண்டு, வளர்ச்சியடையும், அதேசமயம் ஏழைகள் இன்னும் வறுமையில் வாடும் நிலையும் ஏற்படும். இதனை ‘இருண்ட எதிர்காலத்துக்கான தொடக்கம்’ என பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post