Breaking
Tue. Dec 24th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

”வி கெயாா போ யு” We Care For You பவுன்டேசனித் தலைவா் சர்ஜுன் ஆபுபக்கா் – வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரின் பேரியல் அஸ்ரபின் அமைச்சராக பதவி வகி்த்த காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணிப்பாளா் சபை உறுப்பினராக பதவி வகித்தாா்.

அவரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த சமுக சேவை நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் படசாலை மாணவா்களுக்கு ஒரு தொகுதி சீருடைகளை வழங்கி வைத்தாா்.

இந் நிகழ்வு அண்மையில் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது, இவ் நிகழ்வுக்கு சுகாதார பிரதியமைச்சா் பைசால் காசீம், சுகாதார அமைச்சின் சுகாதார சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் டொக்டா் பாலித்த மகேபால மற்றும் வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் ஏ.எல்.எம் நசீா், ஆகியோா் கலந்து கொண்டு பாடசாலை மாணவா்களுக்கு சீருடைகளை வழங்கி வைத்தனா்.

இந் நிகழ்விலும் மேலும் வைத்தியசாலையின் சக வைத்தியா்கள் கலந்து சிறப்பித்தனா்

By

Related Post