Breaking
Sun. Sep 22nd, 2024

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­ய­கவின் பெயர் ரவீந்­திர சந்­திரேஸ் கணேசன் என பந்­துல குண­வர்த்­தன எம்.பி.யி.னால் கூறப்­பட்ட விடயம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்­சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பந்­துல குண­வர்த்தன பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­தது போன்று தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என்றும் பாரா­ளு­மன்­றத்தை விட்டு வெளி­யேற வேண்டும் என்றும் ஆளும் கட்­சி­யினர் நேற்று சபையில் கோஷ­மிட்டு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர்.

ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் சபையில் எழுந்து பந்­துல எம்.பி. சபையை விட்டு வெளி­யேற வேண்டும் என்று இடை­வி­டாது கோஷம் எழுப்­பி­யதால் சபை நட­வ­டிக்கை ஸ்தம்­பி­த­மாகின. சபையில் குழப்­ப­நி­லையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு நீண்ட நேர­மாக பிர­யத்­தனம் மேற்கொண்ட சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய இய­லாத கட்­டத்தில் சபை நட­வ­டிக்­கை­களை 2.35 மணி­ய­ளவில் ஒத்­தி­வைத்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை அமர்வின் போது ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை எழுப்­பிய நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நிலை­யியற் கட்­டளை 19- 1 இன் கீழ் விளக்கம் ஒன்றை முன்­வைப்­ப­தாகக் கூறினார்.

அவர் கூறு­கையில்,

நேற்­றைய தினம் (நேற்று முன்­தினம்) நான் சபையில் இல்­லா­த­போது சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பினர் பந்­துல குண­வர்­த­னவின் உரையில் எனது பெயர் தவ­றாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் மாலை வேளையில் அவர் ஹன்சாட் அறிக்­கையின் விட­யங்­களை தவ­றாகப் புரிந்து கொண்­டு­விட்­ட­தா­கவும், ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெயரை தவ­றாக கூறி­விட்­ட­தா­கவும் கூறி தனது கவ­லையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக தெரி­வித்தார். அத்­துடன் அவர் கவலை வெளி­யிட்­டதை நான் ஏற்­றுக்­கொண்­ட­தா­கவும் கூறினார். அவர் கவலை வெளி­யிட்­ட­மையை நான் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

பந்­துல குண­வர்­தன எம்.பி. எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்ளார். நேற்று கூறிய விட­யமும் நான் சபையில் இல்­லாத போதே இடம்­பெற்­றுள்­ளது. தொடர்ச்­சி­யாக எனது பெய­ருக்கு களங்கம் விளை­வித்து வந்­த­மையை நான் மன்­னித்­தி­ருக்­கிறேன்.

நான் கத்­தோ­லிக்கன். எனது மனைவி முஸ்லிம் மலே ஆவார், எனது வியா­பார நிறு­வ­னங்­களில் தமிழ் உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளனர். நான் நியா­ய­மான வியா­பார நட­வ­டிக்­கை­க­ளி­லேயே ஈடு­பட்டு வரு­கிறேன்.

பாரா­ளு­மன்ற அமர்வு நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்ட தரு­ணத்தில் பந்­துல குண­வர்த்­தன எனது பெய­ருக்கு களங்கம் விளை­வித்­துள்ளார். அத்­துடன் அவர் தனது பிழை­தி­ருத்தத்தை முன்­வைத்த போது நேரடி ஒளி­ப­ரப்பு இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. இப்­படி இவர் நடந்து கொள்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. எனது பொறு­மைக்கும் எல்லை ஒன்று உண்டு. ஹன்­சாட்டில் உள்­ள­தாக இவரால் கூறப்­பட்ட பெயர் அவ்­வாறு இல்லை என்று நிரூ­பித்தால் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­வ­தாக இவர் பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­துள்ளார்.

எனவே அவர் கூறி­ய­வாறு தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என்றார்.

சர்ச்சை

இதற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன எழுந்­த­போது ஆளும் கட்­சி­யினர் பலத்த கோஷங்­களை எழுப்­பினர். பாரா­ளு­மன்­றத்தை விட்டு வெளி­யே­று­மாறு தொடர்ச்­சி­யாக கூச்­ச­லிட்­டனர். ஆளும் கட்­சியின் எம்.பி.கள், அமைச்­சர்கள் சபையில் எழுந்து நின்று பந்­துல எம்.பி.யைப் பார்த்து சபையை விட்டு வெளி­யே­று­மாறு கூறினர். இதன்­போது பந்­துல எம்.பி தனது கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்கு சிறிதும் இட­ம­ளிக்­காத வகையில் கூச்சல் ஏற்­பட்­டி­ருந்­தது.

சபா­நா­யகர்

சபையில் எழுந்­தி­ருந்த கூச்சல் குழப்ப நிலையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய பெரிதும் பிர­யத்­தனம் மேற்­கொண்­ட­போதும் அது கைகூ­ட­வில்லை.

கிரி­யெல்ல

இதன்­போது எழுந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல, பந்­துல குண­வர்­தன எம்.பி. மேற்­படி விட­யத்தைக் கூறி­ய­போது அவ்­வாறு கூற­வேண்டாம் என்று வலி­யு­றுத்­தினேன். எனினும் அவர் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெயரை தவ­றா­கவே தொடர்ச்­சி­யாக கூறிக்­கொண்­டி­ருந்தார். எனினும் அவர் கூறிய விடயம் பொய்ப்­பித்து விட்­டதால் அவர் சவால் விடுத்­ததன் பேரில் தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும். இல்­லையேல் சிறிது நேரத்­திற்­கேனும் பாரா­ளு­மன்­றத்தை விட்டு வெளி­யேற வேண்டும் என்றார், அத்­துடன் பந்­துல எம்.பி.யின் கூற்று பொய்­யா­கி­விட்­டதால் அவர் தனது பத­வியை இழந்­த­வ­ரா­கவே இந்த சபையில் உள்ளார். ஆகவே அவர் சபையை விட்டு வெளி­யேற வேண்டும் என்று சபா­நா­ய­க­ரிடம் முறை­யிட்டார்.

ஒத்­தி­வைப்பு

இதற்கு மத்­தியில் கூச்­சலும் குழப்­ப­நி­லையும் அதி­க­ரித்­தி­ருந்­த­மையால் சபை நட­வ­டிக்­கை­களை சபாநாயகர் ஒத்­தி­வைத்தார்.
ஜே.வி.பி., த.தே.கூ. எம்.பிக்­களும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் சிரித்­த­வாறே அமர்ந்­தி­ருந்­தனர்.
ஒத்­தி­வைக்­கப்­பட்ட சபை மீண்டும் 2.40 க்கு கூடி­யது.

ரவி

மீண்டும் எழுந்த அமைச்சர் ரவி கருணாநாயக்க நேரடி ஒளிபரப்பு நேரத்தில் பந்துல குணவர்தனவினால் கூறப்பட்ட விடயம் நாட்டு மக்களை சென்றடைந்துள்ளது. இதுபோன்ற பல தவறான கருத்துக்களையும் இவரால் முன்வைக்க முடியும்.

எனவே தனது தவறினை இப்போது நேரடி ஒளிபரப்பு நேரத்தில் நாட்டு மக்கள் அறிவதற்கு தெளிவுபடுத்த வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். அத்துடன் இவ்வாறு இனிவரும் காலங்களில் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று சபாநாயகர் கூறியதையடுத்து சபை அமைதி நிலைக்கு வந்தது.

By

Related Post