Breaking
Sun. Dec 29th, 2024
நாட்டின் நாடாளுமன்றை கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஏற்பட்ட அமளிதுமளி நிலைமையைத் தொடர்ந்து இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க 46 லட்ச ரூபா பொதுமக்கள் பணம் செலவிடப்படுகின்றது. நாடாளுமன்றின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தினேஸ் குணவர்தன இடையூறு விளைவிக்கின்றார்.

நாடாளுமன்றில் விசர் ஆட்டம் ஆட இடமளிக்க முடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post