Breaking
Fri. Nov 15th, 2024
சிரிய அகதியை இடறவைத்த ஹங்கேரி நாட்டு கெமரா பெண் இடறி விழு ந்த அந்த அகதி மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார்.
பெட்ரா லாஸ்லோ என்ற அந்த பெண், 52 வயது ஒசாமா அப்துல் மொஹஸன் என்ப வர் தனது குழந்தையுடன் பொலிஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓடும்போது தடு க்கி விழச்செய்தார்.
இந்த வீடியோ சமூகதளம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி யதை அடுத்து லஸ்லோ பணியாற்றிய தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந் தும் நீக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த அகதி ஆரம்பத்தில் பொலிஸார் மீது குற்றம் சாட்டி பின்னர் அந்த வாக்குமூலத்தை மாற்றியதற்கு எதிராக அவர் மீது வழ க்கு தொடுக்கப்போவதாக லாஸ்லோ குறிப்பிட்டார். பேஸ்புக் மீதும் வழக்குத் தொடுக்கப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த லாஸ்லோ, ‘எனது இந்த நிலை க்கு பேஸ்புக்கே பிரதான பங்காற்றியதாக நாம் (அவரும் அவரது கணவரும்) நினைக்கிறோம்.
மக்கள் எனக்கு எதிராக நிற்பதற்கு அது உதவியது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த செம்டெம்பரில் நடந்த இந்த சம்பவத்திற்கு பின் னர் லாஸ்லோ தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டிருந்தார்.
தனது ஏழு வயது மகனை தூக்கிக்கொண்டு ஓடிய மொஹஸன், தன்னை இட றச் செய்ததால் மோசமாக விழுந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். அந்த சிறுவன் சிறு மயக்கத்திற்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு பின் னர் தமக்கு கொலை மற்றும் பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாக லாஸ்லோ குறி ப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் மொஹஸன் ஸ்பெயின் நாட்டுக்கு குடியேறியதோடு ஸ்பேயின் கால்பந்து கழகம் அவர்களது மறுவாழ்வுக்கு உதவ முன்வந்தது.

By

Related Post