Breaking
Fri. Dec 27th, 2024

நாகொடை பிரதேச வனத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், பிரதேசசபைத் தலைவரின் சகோதரர், உடுகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி – நாகொடை பிரதேசசபைத் தலைவரான ஹேமசந்ர விலேகமவின் தம்பி எனக் கூறப்படும் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் குறித்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, குறித்த மரங்களைக் கொண்டு செல்ல பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார்.

எனினும் சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மரங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் யடலவத்த பிரதேச ஆலை ஒன்றில் இருந்து குறித்த மரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உடுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (AD)

Related Post