“கடிகாரம் செய்து கைதான அகமது முகமதின் குடும்பம் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது, நாட்டில் முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்வதைக் காட்டுகிறது’ என்று அமெரிக்க முஸ்லிம்கள் அமைப்பின் தலைவர் யாஸர் பீர்ஜாஸ் கூறியுள்ளார்.
அகமது முகமது சொந்தமாகச் செய்து, வகுப்புக்கு எடுத்து வந்த கடிகாரத்தை ஆசிரியர்கள் வெடிகுண்டு என தவறாகக் கருதியால் அவர் கைது செய்யப்பட்டார்.
மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கத்தார் நாட்டுக்குக் குடி பெயர முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து யாஸர் பீர்ஜாஸ் கூறுகையில் இந்தக் கருத்தை தெரிவித்தார்.