இதேவேளை, அரசுக்கும், ஜ.நா. தீர்மானத்துக்கும் எதிர்பைத் தெரிவித்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரும் இதில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
அதில், தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி, வாசுதேச நாணயக்கார தலைமையிலான இடசாரி முன்னணி, திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி, உதய கம்மன்பில தலைமையிலான தூய ஹெல உறுமய கட்சி என்பனவும் இதில் கலந்துகொண்டிருந்தன.
அதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் விமல் வீரவன்ச கலந்து கொண்டிருக்கவில்லை என்பதுடன், தேசிய சுதந்திர முன்னணி சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர பங்கேற்றிருந்தார்.
அதேபோன்று, ஐ.நா. தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் சுனில் ஹதுன்னெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா, பைஸர் முஸ்தபா மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும், சு.க. மஹிந்த ஆதரவுதரப்பினர் எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் விஷ்வா வர்ணபால கலந்துகொண்டிருந்ததுடன், ஜனநாயகக் கட்சி சார்பில் அதன் தலைவர் பீல்ட் மார்ல் சரத் பொன்சேகா கலந்துகொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், மங்கள சமரவீர, விஜயதாஸ ராஜபக்ஷ, மலிக் சமரவிக்கிரம, கயந்த கருணாதிலக, கபீர் ஹாஷீம், சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்ததுடன்,
மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், இராதாகிருஷ்ணன், சுமந்திரன், ஒமல்பே சோபித தேரர், அமீர் அலி, சித்தார்த்தன், கோவிந்தன் கருனாகரம் (ஜனா), செந்தில் தொண்டமான், லோரண்ஸ் செல்வநாயகம், அரவிந்குமார், வேலுகுமார், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஹஸனலி, நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட பல கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
‘