Breaking
Sat. Nov 16th, 2024

உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகி வருவதால் இஸ்லாத்திற்கான எதிர்ப்பும் அதிகமாகி வருகிறது. கிறித்தவ நாடான கனடாவில் தினந்தோறும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். இதனால் அங்கும் முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவின் புதிய பிரதமராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜஸ்டின் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில்….

கனடா என்பது முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும் சொந்தமான நாடாகும், கனடாவை கட்டி எழுப்பியதில் அனைத்து மதத்தவருக்கும் பங்குயிருக்கிறது. இங்கு வாழக்கூடிய அனைத்து மத மக்களும் அவர்களின்
மத சுதந்திரத்தை முழுமையாக பின்பற்றி வாழலாம்

தேர்தல் பிரச்சாரத்தின் போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறுவது என்றால் ஆயிரம் நிகழ்வுகளை கூறலாம்..

அந்த ஆயிரம் நிகழ்வுகளை விடவும் என்னை கவர்ந்த நிகழ்வு ஒரு இஸ்லாமிய தாய் தொடர்ப்பான நிகழ்வாகும்,

ஆம் எனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு இஸ்லாமிய தாய் தனது குழந்தையை எனக்கு நேரே உயர்த்தியபடி இதோ இந்த எனது மகள் எதிர்காலத்தில் அவளுக்கு சரியயென்று படும் கருத்தை பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் உரிய கருத்து சுதந்திரம் அவளுக்கு இருக்க வேண்டும், அதற்கு தாங்கள் உறுதியளித்தால் உங்களுக்கே நான் வாக்களிப்பேன் என தெரிவித்தார்,

இதோ இப்போது நான் இந்த நாட்டு மக்களுக்கு வாக்களிக்கிறேன், குறிப்பாக அந்த இஸ்லாமிய சகோதிருக்கு வாக்களிக்கிறேன்…

கனடா என்பது அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய நாடு, அனைத்து மதத்தவர்களும் அவர்களது மத சுதந்திரத்தை பேணி வாழ்வதற்கு உரிய அனைத்து உரிமையும் இங்குள்ளது, அதை மேலும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்ச்சிகளையும் எனது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்,

மேற்கண்டவாறு ஜஸ்டீன் பேசினார்.

By

Related Post