உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் தாயை விலைக்கு வாங்க முடியாது என்பார்கள். அவ்வளவு விலை மதிப்புடையது தாய்ப்பாசம்.
ஆனால் சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை விலைகொடுத்து தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
அதாவது குயாங்கானை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் இணையதளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும். அவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்க வேண்டும். போதை பொருள் பயன்படுத்துபவராக இருக்க கூடாது.
அவருக்கு வெளிநாடுகளில் பயணம் செய்த அனுபவம் இருக்க வேண்டும். தனக்கு தாயாக இருக்க அவருக்கு ரூ. 1 கோடி பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விளம்பரத்தின் அருகே பெரிய சிவப்பு விளக்கை பிடித்தபடி அவர் நிற்கும் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவரது கையெழுத்து, போன் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.