Breaking
Mon. Dec 23rd, 2024
ஒவ்வொரு வருடமும் நாட்டில் அறுபதாயிரம் இளைஞர்கள் போதைகளுக்கு அடிமையாகின்றனர் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாட்டின் போதைவஸ்து பாவனை நூற்றுக்கு 5வீதமாக உள்ளது என்று அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஆய்வின்படி போதைவஸ்துக்கு ஆட்பட்டுள்ள ஒரு லட்சம் பேரில் 60 ஆயிரம் பேர் இளைஞர்களாவர்.

இந்தநிலையில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் நாட்டின் நீதியில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பாரியளவில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போதைவஸ்து பாவனையாளர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் திட்டம் தோல்வி கண்டுள்ளதாக ரட்நாயக்க ஊடகம் ஒன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

By

Related Post