Breaking
Fri. Nov 15th, 2024

கொழும்பு, கோட்­டையில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்­தினுள் சீ.எஸ்.என் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் அலு­வ­லகம் ஒன்றும் இயங்கி வந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் இந்த அலு­வ­லகம் ஜனா­தி­பதி சர்­வ­தேச ஊடகப் பிரிவு என்ற பெயரில் இயங்­கி­வந்­துள்­ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர்களான

நாமல் ராஜ­பக்ஷ, யோஷித்த ராஜ­பக்ஷ, மற்றும் சில யுவ­திகள் மட்­டுமே இங்கு வந்­து­போ­யுள்­ளனர்.
எனினும் ஜனா­தி­பதி ஊடகப் பிரி­வுடன் எந்த வகை­யிலும் தொடர்­பு­ப­டாத நிலையில் இயங்கி வந்த இந்த அலு­வ­ல­கத்தின் மூலம் நடை­பெற்ற பணிகள் குறித்து யாரும் அறிந்­தி­ருக்­கவும் இல்லை.
இந்­நி­லையில் குறித்த அலு­வ­ல­கத்தின் பூட்­டுக்கள் உடைக்­கப்­பட்டு சோத­னை­யி­டப்­பட்ட போது, அந்த அலு­வ­லகம் யோஷித்த ராஜ­ப­க்ஷ­வுக்குச் சொந்­த­மான சீஎஸ்என் தொலைக்­காட்­சிக்­கு­ரிய அலு­வ­ல­க­மாக செயற்­பட்டு வந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.
ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் அலரி மாளி­கையில் இருந்த ராஜ­ப­க்ஷ­வினர் தொடர்­பான அனைத்து கோவை­களும் அவர்­களால் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்ள நிலையில், இந்த அலு­வ­லகம் மாத்­திரம் ராஜ­ப­க்ஷ­வி­ன­ருக்கு மறந்து போயுள்­ள­தாக அனு­மா­னிக்க முடி­கின்­றது.
ஏனெனில் இங்கு சீஎஸ்என் தொலைக்­காட்­சியின் கோப்­பு­களும், ஒளி­ப­ரப்பு தட்­டி­களும் நூற்றுக் கணக்கில் குவிந்து கிடக்கின்றன.
சீஎஸ்என் நிறுவனம் அரச வளங்களை பயன்படுத்தி நடாத்தப்பட்டு வந்துள்ளமை இதன் மூலம் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகியுள்ளது என்று அரசாங்க தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

By

Related Post