Breaking
Fri. Nov 15th, 2024
இந்தியா இலங்கைக்கு புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இந்திய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது   புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களையே இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இலங்கையின் விமானப்படை தளபதி உயர்மார்சல் கஹான் புளத்சிங்க பாகிஸ்தானிற்கு அடுத்த மாதம் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் குறித்து ஆராயவுள்ள நிலையிலேயே இந்தியாவின் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் பழைய விமானங்களிற்கு பதில் புதிய விமானங்களை வாங்குவதற்காகவே பாகிஸ்தானிற்கான இந்த விஜயம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்ற போதிலும்,விமானப்படை அதிகாரிகள் இது பாகிஸ்தானிற்கான வழமையான விஜயம், பாகிஸ்தானின் ஜேஎவ் தண்டர் யுத்தவிமானத்தை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என  தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானினும், இந்தியாவினதும் இந்த போர் விமானங்கள் ஓரே மாதிரியான செயற்பாட்டு திறன்களை கொண்டவை, ஓரேமாதிரியான ஆயுதங்களை கொண்டுசெல்ல கூடியவை, நவீன ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.மேலும் வல்லரசுகளின் விமானங்களைவ விட விலை குறைவானவை.

இவற்றின் விலைகள் அதிகமாகயிருந்தாலும் மாறிவரும் புவிசார்அரசியல் சூழலை கருத்தில்கொண்டு இலங்கை தனது பழைய சுப்பர்சோனிக் விமானங்களிற்கு பதில் புதியநவீன விமானங்களை கொள்வனவுசெய்யவேண்டியுள்ளது என இலங்கை விமானப்படை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இலங்கைக்கு அதன் மட்டுப்படுத்தப்பட்ட விமான கண்காணிப்பு நடவடிக்கைகளிற்காக இவ்வாறான அதிநவீன விமானங்கள் அவசியமா என்பது குறித்து பாதுகாப்பு வட்டாரங்களில் சில கேள்விகள்’ காணப்பட்டாலும்,புதிதாக உருவாகிவரும் பூகோள அரசியல் சூழ்;நிலை காரணமாக இலங்கை பலவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள தயாராகயிருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர், அதனால் புதிய தலைமுறை விமானங்கள் இலங்கைக்கு அவசியம் என்பது அவர்கள் வாதம்.

பாகிஸ்தானின் விலை குறைவான ஜெட்விமானங்களை கொள்வனவுசெய்வதற்கு இலங்கை விமானப்படையினர் காட்டிய ஆர்வத்தை தொடர்ந்தே இந்தியா தனது விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.பாக்கிஸ்தானின் விமானங்கள் ஏற்கனவே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்திய விமானங்கள் இன்னமும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதையும் அவை சுட்டிக்காட்டின.

பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின்படி இந்தியாவின் தேஜாக்களே இறுதியில் வெற்றிபெறும் என தெரியவருகின்றது.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு துறை நிபுணர் ஓருவர் இலங்கை இவ்வளவு நவீன விமானத்தினை கொள்வனவுசெய்யவேண்டிய தேவை ஏன்  என கேள்விஎழுப்பியுள்ளார்,இலங்கை ஓரளவு பாதுகாப்பான அயலில் உள்ளது,என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

By

Related Post