இலஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் லஞ்ச, ஊழல்கள் தொடர்பான 6700 முறைப்பாடுகள் தேங்கிக் கிடப்பதாக அறியக்கிடைத்துள்ளது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், இத்தகவல்களை நேற்றைய செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டுள்ளார்.
இவற்றில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த சில மாதங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவாகும்.
தற்போதைய நிலையில் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் கீழ் 170க்கும் மேற்பட்ட பொலிசாரும், நான்கு விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.