– அஸ்ரப் ஏ சமத் –
ஹம்பாந்தோட்டையில் பல்லிமல்ல சந்தியில் கடந்த ஒக்டோபா் 12ஆம் திகதி சுத்தமான குடிநீா் பெற்றுத் தருமாரு ஹம்பாந்தோட்டையில் உள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள் அரசியல் லாபம் கருதி மக்களை ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்தினாா்கள் . இம் மக்களின் குடி நீா்த்திட்டத்திற்காக ஏற்கனவே என்னால் சமா்ப்பிக்கப்பட்ட அமைச்ரவைப் பத்திரத்தில் 2149 லச்சம் ருபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா்.
இன்று (29) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இக் மக்களின் சுத்தமான குடிநிா்த்திட்டத்திற்காக என்னால் ஏற்கனவே உரிய அமைச்சரவை பத்திரம் சமா்ப்பித்து 2149 இலட்சம் ருபா நிதி வேண்டி கடந்த ஒக்டோபா் 14ஆம் திகதி அமைச்சரவைக்கு சமா்ப்பித்திருந்தேன். அதனை ஜனாதிபதி ,பிரதமா் உட்பட அமைச்சரவை அதனை அங்கிகரித்தனா் ஆனால் . . ஹம்பாந்தோட்டையில் உள்ள சில எதிா்க்கட்சி அரசியல்வாதிகள் எதிா்காலத்தில் உள்ளுராட்சி தோ்தலை மையமாக வைத்து தமது அரசியல் லாபதத்திற்காக மக்களை ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுத்தினாா்கள். இத்திட்டத்திற்காக நான் சமா்ப்பித்த அமைச்சரவைப் பததிரம் அனுமதிக்கப்பட்டு நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை இத்திட்டத்தினை முன்னெடுத்து செல்ல உள்ளது. இதனை அறிந்து கொண்ட அவா்கள் மக்களை ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்துகின்றனா்.
என்னால் முதற்கட்டமாக சமா்ப்பிக்கப்பட்ட அமைச்சரவையில் 608 இலட்சம் ருபா நிதி ஏற்கனவே அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாகவே 2149 லச்சம் ருபா நிதி அரசினால் ஒதுக்கீடு செயய்ப்பட்டுள்ளது.
இதனால் கொன்னொடுவ, பதசிரிய போன்ற பகுதிகளில் வாழும் 3000 குடும்பங்கள் நன்மையடைய உள்ளனா்.
திஸ்ஸமகாராமையில் அசுத்தமான சேறு தண்னீரைப் அப்பிரதேச மக்கள் பாவித்து வருகின்றனா். இதனால் அப் பிரேதேசத்தில் சிறுநீரக நோய் கூடுதலான மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கும் சமுக சேவை அமைச்சின் ஊடாக 3000 ருபா நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அமுல்படுத்தி வருகின்றனா். ஹம்பாந்தோட்டை பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீா் மற்றும் அங்கு உள்ள நீா்த்தாங்கிகள் புதிதாக புனா் நிர்மாணம் செய்வதற்குமாக நீா்விநியோக வடிகாலமைப்புச் சபையுடன் எனது அமைச்சில் கூட்டமொன்றை நடாத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளேன்.