– ஜவ்பர்கான் –
எந்தவொரு பெற்றாரும் தமது பிள்ளைகளுக்கு நஞ்சூட்ட விரும்பமாட்டார்கள். ஆனால் மறைமுகமாக பெற்றோர்கள் நஞ்சுகலந்த, இராசாயன பசளையுடன் தயாரிக்கப்பட்ட நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள்.
இதனால் பலர் நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா தெரிவித்தார்.
காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டுத்தோட்ட வயல் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி விவசாய போதனாசிரியை குந்தகை ரவிசங்கரின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற இந்த வயல் விழாவில் தொடர்ந்துரையாற்றிய அவர் இன்று சந்தைகளில் விற்கப்படும் அதிகமான மரக்கறி வகைகள் நஞ்சுகலந்த இராசாயன பசளையுடன் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளையே ஆகும். இதன் மூலம்; தமது பிள்ளைகளுக்கு மறைமுகமாக பெற்றோர்கள் நஞ்சு உட்டுகின்றனர்.
மரக்கறிவகைகளை வீட்டுத்தோட்டத்தில் உற்பத்திய செய்வதன் மூலம் நஞ்சற்ற மரக்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.
நாம் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்கவேண்டும். சந்தைகளுக்கு வரும் சில காய்வகைகளுக்கு மருந்துகள் அடிகக்கப்படுவதில்லை. அதில் முருங்கைக்காய், வாழைக்காய், அம்பிரளங்காய், அவரைக்காய், தூதுவளை, குறிஞ்சா இலை போன்ற மரக்கறி வகைகளுக்கும் இலைக்கறிவகைகளுக்கும் மருந்து அடிப்பதில் என நாம் தெரிந்து கொண்டால்; நாம் சரியானவற்றை தெரிவு செய்ய முடியும் என்றார்.