Breaking
Sun. Jan 12th, 2025

உலக நாடுகள் அனைத்தும் இன்று எங்கள் நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

அன்று எங்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட மேற்கத்திய நாடுகள் உட்பட இன்று எங்களுடன் இணைந்துள்ளது.

இலங்கை தற்போது சர்வதேசத்தினுள் பெயர் ஒன்றினை பெற்றுகொண்டுள்ள நிலையில் ஜனவரி 08ஆம் திகதி ஏற்பட்டட புரட்சியுடன் உலகினை வெற்றி கொள்ள முடிந்துள்ளது.

எங்கள் நாட்டிற்கு தற்போது வரையில் அவசியமான வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நிதி உதவி கிடைத்துள்ளதாகவும், அதனை பெற்றுகொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வது கூட்டு அரசாங்கத்தின் நோக்கம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post